
நேற்று உலகப் பூனைகளின் தினமாம். ஆனால் என்னை அறியாமல் பூனையைப் பற்றி நேற்று கவிதை எழுதினேன். அதை இன்று இங்குப் பதிவு செய்கிறேன்.
ஒரு பூனை
அழகியசிங்கர்
வீட்டின் கீழே
ஒயிலாக இருந்த
பூனை ஒன்று
பயப்படாமல் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்தது
நான் அதனிடம்
கேட்டேன்
நீ என்னிடம் பயப்பட வேண்டுமா
நான் உன்னிடம் பயப்பட வேண்டுமா
அது சிரித்தபடியே போய்விட்டது
