அடுக்களையை உருட்டும் பூனை
அங்கே இங்கே ஓடி உடைகிறது
அடுக்கி வைத்தப் பானை!
வயலில் கால் தடம்
அங்கும் மிங்குமாய் பதிந் திருக்கு
பனம்பழம் விழுந்த இடம்!
தொங்கும் சிலந்தி வலை
உடைந்த கிளை யிலிருந்து ஒவ் வொன்றாய்
விழும் பழுத்த இலை!
பழங்காலத்து உணவாம் தினை
காணக் கிடைக்கவில்லை நம் முன்னோர்கள்
வைத்துப் போன பனை!
- பிச்சிப் பூ
( சங்கீதா பிரபு)
திருச்சூர்
கேரளா

பழமை இதம்.