லிமரைக்கூ கவிதைகள்/நெல்லை க சோமசுந்தரி

  1. பண்டிகை நாட்களின் கொண்டாட்டம்
    ஓலைக் குடிசையில் குவிந்து இருக்கும்
    வயிற்றிற்கு எப்போதும் திண்டாட்டம்

2. எழுத்தை இயக்கும் அசை
மண்ணின் மரபை மீட்டித் தருகிறது
நாட்டுப்புற பாடல் இசை

3. பேசும் குரலின் நேசம்
மறக்க முடியாமல் சுழன்று நிற்கும்
நெல்லை மண்ணின் வாசம்