புத்தர் வேண்டும்../அழகியசிங்கர்

நாங்குநேரியில்
நடந்த சம்பவத்திற்குப்
பிறகு
எதிர்காலம் பற்றி எல்லோருக்கும்
பயம் வந்துவிட்டது

மாணவர்கள்
ஒருவருக்கொருவர்
பேசுவதுகூட
ஆபத்தாய் முடியும்
போலிருக்கிறது
ஒவ்வொரு
வகுப்பிலும் ஒரு
புத்தரை உருவாக்க வேண்டும்
அதன்பின்தான் கல்வி
புகட்ட வேண்டுமா?

புத்தர் வேண்டும்