ஆயுள் நூறு/மீ. விசுவநாதன்


வாய்க்கால் கரையில்
அரசமரம்
ஆயுள் நூறு ..
இன்றும் உறுதியாக நிற்கிறது
ஆடிக்காற்றின் உரசலால்
அதன் இலைகள் சத்தமிடுகின்றன
மற்ற பொழுதில்
ரொம்பவும் அமைதி
புறத்தே என்ன சலசலப்பானாலும்
அதன்
அகத்தின் மௌனவேர்
நன்றாக ஆழ்ந்து பரந்து கிடக்கிறது
ஆயுள் நூறு.

  (12.08.2016 17.20 pm)

One Comment on “ஆயுள் நூறு/மீ. விசுவநாதன்”

Comments are closed.