
மருந்துக்குக் கூட
இலையில்லை, பூவில்லை.
விரி கிளையின் நுனிச் சுள்ளியில்
ஒரு பறவை.
இடைவிடாமல் கூப்பிடுகிறது.
இடைவிடாமல் பாடுகிறது.
இடைவிடாமல் புகார் செய்கிறது.
இடைவிடாமல் தொழுகிறது.
இடைவிடாமல் எச்சரிக்கை செய்கிறது.
இடைவிடாமல் போதிக்கிறது.
இடைவிடாமல் செய்ய
இலையோ பூவோ தேவையில்லை.
இடைவிடாமை போதும்.
%
2021
