இரு இதயங்கள்/முருகு

ஒரு இதயம்
பேசுகிறது…
மறு இதயம்
கேட்கிறதா?…

கேட்கிறது
என்ற நம்பிக்கையில்
பேசும்
இதயமும்…

கேட்டுக் கொண்டு தான்
இருக்கிறேன்
என்றுணர்த்திய நம்பிக்கையில்
மறு இதயமும்…

மௌனமாய்
இன்னும்
உறவில் தான்
உள்ளன…