
நேற்றையப் பொழுது
சாளரம் தட்டிய
குனு..குனு ஒலியால்
வட்டக்கண்கள் பொருத்திய
ஒற்றைப் புறாவிடம்
தஞ்சம் புகுந்தேன்.
இன்றையப் பொழுதில்
இரட்டை புறாக்களின்
தரிசனம்
நாளை மூன்றா என்று
கேட்காதீர்கள்
இல்லாமலும் போகலாம்
கூடுதலாயும் வந்து சேரலாம்
இந்த நொடி புறாக்களோடு குனு..குனு ஒலியை எழுப்பியபடி
இரைகொத்திக்
கொள்கிறேன்
என் சன்னலுக்குள்
வரட்டும் வானம்
