இன்று சதுரங்கமகுடத்துக்கான மோதல்/பாலு கவுண்டர்

சில நாள்களுக்கு முன்பு சர்வதேச செஸ் சம்மேளனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் உங்களுக்குப் பிடித்த செஸ் வீரர் யார் என்று பார்வையாளர்களிடம் தொகுப்பாளர் கேட்கும்போது, பெரும்பாலானவர்கள்
மேக்னஸ் கார்ல்சன் என்றே கூறினார்கள்.

சிலர் வேறு சிலரின் பெயர்களைக் கூறினார்கள். ஒருவர் கூட பிரக்ஞானந்தாவின் பெயரைக் கூறவில்லை.

அப்படியொரு எதிர்பார்க்கப்படாத இடத்தில் இருந்து சதுரங்கத்தின் ராஜாவாக முடிசூடுவதற்கான இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.

பிடே உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் அவர்.

அரையிறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ கருவானாவை டைபிரேக்கர் ஆட்டத்தில் அவர் வீழ்த்தினார்.

பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் அவர் மோதுகிறார்.

அரையிறுதிப் போட்டியில் வென்ற பிறகு பேசிய பிரக்ஞானந்தா, “மேக்னஸ் கார்ல்சனுடன் ஆடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை” என்று கூறினார்.

எளிமையான பிரக்ஞானந்தா.நம்ம வீட்டு பையன் போல. Simple dress. எண்ணெய் தடவிய முடி. அமைதியான முகத்தில் அழகாக திருநீறு கீற்று.

விளையாட்டும்போது எந்த பதட்டமும் இல்லை.Casual ஆக காய்களை நகர்த்தும் திறன் எதிராளியையும் யோசிக்க வைக்கும்.

வென்று வா பிரக்ஞானந்தா.
உன் போன்ற இளைஞர்களுக்கு
சாதிக்க ஒரு உள்ளுணர்வாய் இரு.

இறுதிப் போட்டி இன்று தொடங்குகிறது.

One Comment on “இன்று சதுரங்கமகுடத்துக்கான மோதல்/பாலு கவுண்டர்”

  1. வெற்றி மகள் என்றும் பிரக்ஞானந்தாவுடன் துணை இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

Comments are closed.