யவக்னி ப்ரிகோஸின்/நியாண்டர் செல்வன்

1979

மாஸ்கோவில் யவக்னி ப்ரிகோஸின் (Yevgeny Prigozhin) எனும் அந்த 18 வயது இளைஞன் திருட்டு குற்றத்தில் கைது செய்யபட்டு சிறைக்கு செல்கிறான். சிறையில் இருந்து வெளியே வந்து கேங்க் ஒன்றில் சேர்கிறான். அப்பா இல்லாத பையன், அம்மா நர்ஸ். பையனை சரியாக அவரால் வளர்க்க முடியவில்லை

கேங்கில் சேர்ந்து ஒரு பெண்ணின் கழுத்தை நெறித்து நகையை திருடியதற்காக 12 ஆண்டுகள் சிறைக்கு செல்கிறான். சிறையில் லேத், வெல்டிங் எல்லாம் கற்றுக்கொண்டு திருந்துகிறான். சோவியத் யூனியன் உடைந்து சிதறியபின் ரிலீஸ் ஆகி ஒரு உணவகத்தை துவக்குகிறான்

அடுத்த பத்தாண்டுகள் மாஸ்கோவெங்கும் அவனது உணவகத்தின் கிளைகள் பரவுகின்றன. அரசு விருந்துகளுக்கு உணவு சப்ளை செய்யும் கான்டிராக்டை எடுக்கிறான். விருந்துகளில் அதிபர் புடினை சந்திக்கிறான். நட்பு மலர்கிறது

ரஷ்ய ராணுவத்துக்கு உணவு சப்ளை செய்யும் கான்டிராக்டை 120 கோடி டாலருக்கு எடுக்கிறான். புடின் அதன்பின் ஒரு ஐடியா சொல்கிறார். “ஒரு தனியார் ராணுவத்தை ஆரம்பித்து நடத்து” என

வாக்னர் ராணுவம் பிறக்கிறது. உக்ரைன் மேல் 2014ல் போர் தொடுக்கிறான். அடுத்தடுத்து ரஷ்ய ராணுவம் நேரடியாக செல்ல முடியாத இடமெங்கும் வாக்னர் ராணுவம் செல்கிறது.

2023

அமெரிக்க ராணுவம் 600 கோடி டாலரை கொடுத்து அவனை விலைக்கு வாங்குகிறது. வாக்னர் ராணுவம் அதன்பின் மாஸ்கோவை நோக்கி விரைகிறது. ரஷ்ய ரானுவம் முழுக்க உக்ரெய்னில் குவிக்கபட்ட நிலையில் அவனை தடுக்க யாரும் இல்லை. இன்னும் நாலு மணிநேரத்தில் மாஸ்கோ பிடிபடும் என்ற நிலையில் பெலாரஸ் நாட்டு அதிபர் தலையிடுகிறார். ப்ரிகோஸினுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது.

ஆகஸ்ட் 23,

ப்ரிகோஸின் தனியார் ஜெட்டில் வாக்னர் ராணுவத்தின் பத்து பேருடன் நாட்டை விட்டு வெளியேறுகிறான். விண்ணில் இருந்து ஒரு ஏவுகணை விமானத்தை தாக்குகிறது. விமானம் எரிந்துவிழும் காட்சிகள் படமாக்காப்ட்டு சோசியல் மீடியாவில் பரவுகின்றன

புடினின் பழைய பேட்டி சமூக ஊடகங்களில் வைரல் ஆகிறது

“நீங்கள் எல்லாவற்றையும் மன்னிப்பீர்களா?” என செய்தியாளர் கேட்கிறார்

“ஆம். ஒன்றே ஒன்றை தவிர”

“அது என்ன?”

“துரோகம்” என சொல்லி மெதுவாக சிரிக்கிறார் புடின்

~

One Comment on “யவக்னி ப்ரிகோஸின்/நியாண்டர் செல்வன்”

Comments are closed.