வாழும் சாட்சிகள்/அதங்கோடு அனிஷ்குமார்

விரலசைவில்
ஒரு நொடியில்
கடல் கடந்தும்
கதைக்க முடிகிறது.

கால வேகத்தை
கடக்க கூட
எதிர்காலத்தில்
கைகூடலாம்.

நாளைகளை
இன்றே எழுதிப் பார்க்கலாம்.

நமக்காக
செயற்கை கரங்கள்
கவிதை எழுதிக்குவிக்கும்
காலத்தில்
அசாத்தியங்கள்
சாத்தியமாகும்
அற்புத உலகின்
வாழும் சாட்சிகள்
நானும்
நீங்களும்

ஆனாலும் என்ன?
புல் தானாகவே வளர்கிறது.
மொட்டவிழ்ந்து
பூக்கள் தானாகவே
மலர்கின்றன.