இலக்கிய இன்பம் 74/கோவை எழிலன்


யாவரும் இல்லாத் தேவர் நல்நாடு

கம்பன் தன் காவியத்தில் அயோத்தியில் இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை என்பான். அவ்வாறு எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்றிருக்கும் இந்திர உலகை ஏளனம் செய்கிறது மணிமேகலைப் பாடலடிகள்.

மணிமேகலையில் வரும் ஆபுத்திரன் வரலாற்றில் இந்திரன் ஆபுத்திரனுக்கு வரமளிக்க விழைகிறான். அப்போது அவனைப் பார்த்து ஆபுத்திரன் உன் உலகில் அறம் செய்பவர்களோ, மற்றவர்களைப் பேணுபவர்களோ, பற்றை அறுக்க முயலும் ஞானிகளோ இவர்களில் யாரும் இல்லை. அப்படியிருக்க உன் உலகிற்கு என்ன சிறப்பு இருக்கிறது? என்ற பொருள் வரும்படி இந்திரனை விளிக்கிறான்.

“அறம்செய் மாக்கள்
புறங்காத்து ஓம்புநர்
நல்தவம் செய்வோர்
பற்றுஅற முயல்வோர்
யாவரும் இல்லாத்
தேவர்நல் நாட்டுக்கு
இறைவன் ஆகிய
பெருவிறல் வேந்தே”