
பானுமதி ந
- ஸ்வரம்
ஒரே ஒரு அட்சரம்
அதன் கார்வையை
கொண்டு வரத் தவிக்கும்
நாண்கள்.
அந்தக் கொக்கும் கூட
ஒற்றைக் காலில்.
2. அந்தரத்தில்
அங்கே திகைத்த ஒரு புள்ளி
எந்த விசையால் துள்ளித் துள்ளி
சுழலும் சக்கரத்தில் விழுந்ததோ
நடுவில் விழுந்த செங்குத்து
பலப் பிசிரிகளாய் பலக் கோடுகளாய்
சிறிதும் பெரிதும் அரிதும்
தவிப்பும் வியப்புமாகி ஆடும் நடனம்
அந்த அந்தரப் புள்ளியை
நோக்கி வீழும் மற்றோர் புள்ளி
அதீத காலம் சென்று சேராத இரண்டும்
ஓரம், நடு, என்று சுழன்று
அந்தரத்தை ஏங்குகிறது.
