சரீரத்தை அறியாத பெரிய ஆத்மா/அழகியசிங்கர்

ரமண விருந்து என்ற புத்தகத்திலிருந்து

ஆரம்ப காலத்தில் அண்ணாமலையார் கோவில் பெரிய யானை, ஆசிரமத்து வழியே போகும்போது யானை பாகன் யானையை ஆசிரமத்திற்குள் செலுத்தி வருவான். அவன் அந்த யானையை பகவான் முன் நிறுத்தி ஆசிர்மித்தார் கொடுக்கும் ஆகாரத்தை உண்ணச் செய்வான் பிறகு அந்த யானை பகவானை நோக்கி பிளிறித் தனது நன்றியைத் தெரிவித்து விட்டுச் செல்லும்.

ஒரு சமயம் ஜுப்ளி கொட்டகைக்குப் பக்கத்திலுள்ள மைதானத்தில் யானையை நிறுத்தி வைத்திருந்தார்கள். கோசாலைப் பக்கம் போய்விட்டுத் திரும்பிய பகவான் யானையைப் பார்த்ததும், அங்கு சென்று அதன் பக்கத்தில் நின்று, அதற்கு ஆகாரம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அன்று ஆசிரமத்திற்கு வந்திருந்த ஓர் அமெரிக்க இளைஞன் ஆசிரமத்தில் பல இடங்களையும் போட்டோ எடுத்துக் கொண்டு வந்தவன், யானை அருகில் பகவான் நிற்பதைக் கண்டான். உடனே அதைப் போட்டோ எடுத்துக்கொண்டு அங்கிருந்து திரும்பிச் சென்றான் .

பின்னர் அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்ற
அவ்விளைஞன் தான் எடுத்த பகவான் யானையுடன் நிற்கும்’ போட்டோவை ஆசிர்வத்திற்கு அனுப்பி வைத்தான்.

பகவானும் அடியார்களும் அந்த போட்டோவைப் பார்த்தனர்.

அந்த இளைஞன் போட்டோவின் பின்புறம் எழுதியிருந்தாவது:

சரீரத்தை அறியாத பெரிய ஆத்மா. ஆத்மாவை அறியாத பெரிய சரீரம் ; இரண்டும் ஒரே இடத்தில் இருக்கின்றன.

பெரிய சரீரத்தை உடைய யானை தனது ஆத்மாவை அறியாதது. பெரிய ஆத்மாவை உடைய பகவான் சரீர பாவனை அற்றவர்.

அழகான வர்ணனை நன்றி.

One Comment on “சரீரத்தை அறியாத பெரிய ஆத்மா/அழகியசிங்கர்”

Comments are closed.