
முன்னே கிளைத்திருக்கும் தெருக்களில் எதில் நடையைத் தொடர்வது
பின்னால் திரும்பாமல் முதுகுபக்கமாக
பத்து அடிகள் பின்நோக்கி நடந்ததை பார்த்தவர்கள்
மனதில் நடையின் விசித்திரத்தை பார்க்காலமலா இருந்திருப்பார்கள்
பின்மாலையின் வெளிச்சத்தில்
மஞ்சள் ஆரஞ்சு வண்ணமிரண்டையும்
பிரித்து காண விழைந்ததினால்
அங்கேயே நின்றிருந்த நிமிடங்கள் எவ்வளவென கைக்கடிகாரத்தைப் சரிபார்க்கவில்லை
முன்அறையின் எதிரிலுள்ள சாளரத்தின் திரையின் புறத்தே
நடமாடும் உருவின் தெளிவின்மையைக் காட்டிலும்
அதிலெழும் குரலில் துல்லியப்படும் வடிவம்
நேர்த்தியாகிக் கொண்டே இருக்க
வருத்தத்தின் இறுதி நொடிபோல்
நாற்சந்தியில் கலந்தது தெரு .
