மனதுக்குப் பிடித்த கவிதைகள்/அழகியசிங்கர்

10) பிசகு

லக்ஷ்மி மணிவண்ணன்

நான் ஒரு பிசகு
பின்னர் சரி செய்தேன் அதனினும் பிசகு
சரி செய்யச்செய்ய பிசகு
பெரும் பிசகாயிற்று.
நானா சரி செய்கிறேன்?
முன்னிருந்து நீங்களல்லோ சரி செய்கிறீர்கள்!

பிசகை சரிசெய்ய பிசகு தோன்றும்
பிசகுருண்டையை உருட்டிக்கொண்டே
செல்வேன்
ஒரு நாய்போல
பிசகுருண்டையைத் தின்னத் தருவேன்
பிடிமாவாக.
பிசகுருண்டையைச் சுட்டிக் காட்டுவேன்
நீங்கள் பெருந்துயரில் கண்டு வியந்த
உங்களுக்கேயுரிய
கசந்த ஒரு பௌர்ணமியாக…
பிசகுருண்டயை
சந்தியில் மாட்டுவேன்
பிசகுருண்டையை
சிபாரிசும் செய்வேன்
சுவைக்கவும் தருவேன்.

பிசகுருண்டை என்னிடம் வந்து சேர்ந்தது.
ஒரு வழியில்
உங்களிடம் வந்து சேர்வதோ
பிறிதொரு மார்க்கத்தில்…
எல்லா பிசகும் ஒன்றல்ல
ஒவ்வொரு பிசகும் ஒவ்வொரு கிரகம்.

நன்றி : கேட்பவரே – கவிதைகள் – வக்ஷ்மி மணிவண்ணன் – வெளியீடு : படிகம், நவீன கவிதைக்கான இதழ், 4-184 தெற்குத் தெரு மாடத்தட்டுவிளை, வில்லுக்குறி 629 180 – விலை : ரூ350 – Cell No. 9840838681