ஹைக்கூ/ஹரணி

குப்பை எடுக்கிறாள்
குப்பை போடுகிறார்கள்
வாழ்வு மாறவேண்டும்.

000

கண்ணாடி சன்னல்கள்
மரணப் புதைகுழிகள்
இறந்த தட்டான்கள்.

000

கைப்பேசி வழிதான்
சொல்வது எல்லாம்
கைப்பேசி ஆபத்தென்று.

000

எப்படிச் சிதைத்தாலும்
துளிர்க்கிறது மரம்
மனிதனுக்குப் பாடம்.

000

மரங்களை வெட்டிய
புது விரிவு சாலையில்
மரம் நடுவிழா.

000
அம்மா மூன்று தடவை
மருந்துகள் இருமல்கள்
முப்பது தடவை.

000