மனம்/பி. ஆர். கிரிஜா

மனம் ஒரு ஊஞ்சல்
ஓயாத ஆட்டம் !
நிறுத்த வழி இல்லை,
நித்தமும் அவதி !
கண் மூடி மௌனமாய் தியானித்த போதும்,
மனதினில்
பேராழியின் பேரலை !
மனதை ஒருமுகப்படுத்துவாய்
இது சித்தர் வாக்கு !
கை கட்டி வாய் மூடி
இருப்பினும்,
மனம் ஒரு நிலையில்
இல்லை !
மின்னலின் வேகம்
ஒன்றுமில்லை,
மாட மாளிகை
அமைப்பதும்
இம்மனம் !
பாழும் கிணற்றில்
குதிக்கத் தூண்டுவதும்
இம்மனம் !
மனமே நீ
அமைதி கொள் !
மனிதப் பிறவியின்
அர்த்தம் விளங்கி விடும் !


30/08/2023

One Comment on “மனம்/பி. ஆர். கிரிஜா”

Comments are closed.