மதியழகன்/கவிதைக் குறித்து கேள்வி பதில்

1,கவிதை எழுத உகந்த நேரம் என்ன
பதில் : இருளும் ஒளியும் சந்தித்துக் கொள்ளும் இரவு

2.கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?
பதில்: கவிதையின் முக்கால் பங்கு செயற்கையாக யோசிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இயற்கையாக வந்துவிழும் கால்பகுதியில் தான் கவிதையின் ஜீவன் இருக்கும்.

3,கவிதை எழுத. தலைப்பு கொடுத்தால் தான் கவிதையை எழுதுவீர்களா. ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா. ?
பதில்: நான் தலைப்புக்காக கவிதை எழுதியது குறைவே. அதே போல் பட்துக்காகவும் உருவத்துக்காகவும் எழுதிய கவிதைகளும் குறைவே

  1. உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா என்பதை அறிய என்ன முயற்சி செய்வீர்கள்?
    பதில்: ஐந்தாறு தடவை மனதில் உருப்போட்டு பார்ப்பேன். மீண்டும் மீண்டும் திருத்துவேன்.
  2. உங்கள் கவிதை மூலமாக சமுதாயக் கோபத்தை காட்ட விரும்புகிறீர்களா.?
    சுயஇரக்கமும், சுயபச்சாதாபமும், இயலாமையும் என் கவிதைகளில் அடிக்கடி எட்டிப்பார்ப்பதை உணருகிறேன். கோபம் குறைவே