
- கவிதை எழுத உகந்த நேரம் என்ன?
குறிப்பிட்ட நேரம் ஏதுமில்லை ஆனால்
இரவு நேரம் மனதுள் அதிகம் தோன்றும் . - 2.கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?
தானாக வரும்பொழுது
மன நிறைவு ஏற்படும்.
- கவிதை எழுத. தலைப்பு கொடுத்தால் தான் கவிதையை எழுதுவீர்களா. ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா.
இரண்டுமே
- உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா என்பதை அறிய என்ன முயற்சி செய்வீர்கள்?
உரத்துப் படித்துப் பார்ப்பேன்.
சரி என்று தோன்றினால் சற்று அழகு படுத்த
முயற்சிப்பேன்.
- உங்கள் கவிதை மூலமாக சமுதாயக் கோபத்தை காட்ட விரும்புகிறீர்களா.?
எனது கவிதைகளில் சமுதாயக் சீர்திருத்தம் பற்றி எழுதியது உண்டு.
