ரத்னா வெங்கட்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்

வணக்கம் சார்

  1. கவிதை எழுத உகந்த நேரம் என்ன?

உகந்ததெனக் குறிப்பிட்ட நேரம் ஏதுமில்லை ஆனால் விடியற் காலை மனதுள் தோன்றுகிற சொல் , விடாது துரத்தினால் காலை 8 மணிக்குள் கவிதை தானாக உருக்கொண்டு விடும்.
அந்தச் சொல்லும் அது தரும் உணர்வும் விடாது துரத்த வேண்டு்ம்..

2.கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?

யோசித்து எழுத வேண்டியிருப்பதை நான் ஒதுக்கி வைத்து விடுவேன். பிறிதொரு நாளில் அது தன்னைத்தானே வடிவமைத்துக் கொள்ளும்.

  1. கவிதை எழுத. தலைப்பு கொடுத்தால் தான் கவிதையை எழுதுவீர்களா. ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா. ?

தொடக்கத்தில் தலைப்பிற்கு எழுதியதுண்டு. அவை செயற்கையாகத் தோன்ற ஆரம்பித்ததும் நிறுத்தி விட்டேன்.
எழுதிய கவிதைகளுக்கு புகைப்படம் தேடி எடுத்துப் போட்டதுண்டு.
திரு. கேசவ் ஜி யின் krishna for Today கிருஷ்ணன் ஓவியங்கள் மயக்கி எழுத வைத்ததுண்டு.

  1. உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா என்பதை அறிய என்ன முயற்சி செய்வீர்கள்?

உரத்துப் படித்துப் பார்ப்பேன்.
சில முறை நட்புகளுக்கு பகிர்ந்து கேட்டதுண்டு. ரவிசுப்பிரமணியன் அண்ணாவிடம் அனுப்பி அவர் கருத்துகளை அறிவதுண்டு.

  1. உங்கள் கவிதை மூலமாக சமுதாயக் கோபத்தை காட்ட விரும்புகிறீர்களா.?

எனது கவிதைகளில் சமுதாயக் கோபங்கள் குறைவே. அகம் சார்ந்த கவிதைகளே அதிகம்.