மதுவந்தி/கவிதைக் குறித்து கேள்வி- பதில்

  1. கவிதை எழுத உகந்த நேரம் என்ன?
    இரவு 10 to 12 , காலை 6 to 8. 2.கவிதை தானாக எழுத வருமா ?அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?
    பொதுவாக,எழுதியே ஆக வேண்டும் என்ற உள் தூண்டுதல்தான் காரணம். யோசித்து எழுதியதும் உண்டு.
  2. கவிதை எழுத. தலைப்பு கொடுத்தால் தான் கவிதையை எழுதுவீர்களா?. ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா. ?
    அப்படி எந்த வித கட்டாயமும் இல்லை. ஆனால், தலைப்பு அல்லது படம் கொடுத்து கவிதை எழுத சொல்வதில் உள்ள சவால் பிடிக்கும்.
  3. உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா என்பதை அறிய என்ன முயற்சி செய்வீர்கள்?
    பொதுவாக, ஊறப் போடுவேன், எழுதி முடித்ததும். 2 அல்லது 3நாட்கள் தாண்டி,மீண்டும் படித்து, சரியெனப் பட்டால்தான் பகிர்வு. தோழமை சொல்லும் திருத்தங் களை ஏற்றுக் கொள்வேன்.
  4. உங்கள் கவிதை மூலமாக சமுதாயக் கோபத்தை காட்ட விரும்புகிறீர்களா.?
    கோபத்தை இப்போதெல்லாம் கவிதையில் காட்ட வேண்டாம் என தோன்றுகிறது. அப்படியே கோபம் வந்தாலும் ,குரல் உயர்த் தாமல் மென் தொனியில் சொல்லவே முடிகிறது.