
சுடுகாடொன்று
சுற்றி திரிந்தது
அது அற்புத
சடலந்தாங்கி
ஆண்டுக் கணக்காய்
சுடுகாடொன்று
சுற்றித் திரிந்தது
சுடுகாடென்றால்
அது மெய் சுடுகாடு
அதில் கொள்ளிவைப்பு
குத்தகையல்ல
இதுவரைக்கும்
கொள்ளி வைத்தார்
எண்ணிலாதார்
என்றிருந்தோம்
சடலமட்டும்
வெந்து வெண்ணீறு
ஆகவில்லை
அதனால் தானோ
என ஐயுறுமாறு
மெய் சுடுகாடாதுவும்
நெட்டுயிர்த்து
நெட்டுயிர்த்து
சுற்றித் திரிந்தது.
யாரோ இறுதியில்
கருணை கூர்ந்து
வைத்தகொள்ளி
பற்றி பிடித்திட
நீறி நீறி
இருந்த சடலமும்
மாயமாய் மறைந்தது
மெய்ச் சுடகாடதுவும்
பொய்ச் சுடுகாடு
போய்ச் சேர்ந்தது.

அருமை அருமை