தாமதமான இதழ் நவீன விருட்சம்/அழகியசிங்கர்

வணக்கம்.

விருட்சம் 123 வது இதழ். தற்போது வெளிவந்து விட்டது. இந்த ஆண்டுக்குள் இன்னும் இரண்டு இதழ்கள் வர உள்ளன.

35 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவரும் காலாண்டு இலக்கிய இதழ்.

எப்போதும்
குறிப்பிட்ட காலத்திற்குள் வருவதில்லை என்பதை கொள்கையாக வைத்திருக்கிறது.

ஆனால். எப்போதுமே தாமதமாக வருவதால். ‘தாமதமான இதழ்’ என்று குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.

யார் எழுதியிருக்கிறார்கள் என்பதை இங்கு தெரிவிக்கப் போவதில்லை.

எனக்குச் சில கேள்விகள் எழுகின்றன. ஒவ்வொரு பத்திரிகையிலும் ஒரு சில பேர் நிரந்தரமாக இடம் பிடித்து விடுகிறார்கள். அவருடைய படைப்புகள் ஒவ்வொரு இதழிலும் வெளிப்படுகின்றன.
அதை முறியடிக்க முடியாது.

விருட்சம் இதழுக்கும். அது மாதிரியான சங்கடம்
இல்லாமல் இல்லை.

இன்று இந்த அளவிற்கு விருட்சம் வருகிறதே என்றுதான் பெருமைப்பட வேண்டும். படைப்புகள் மீதுதான் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

வாங்கி வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

விருட்சம்
தனி இதழ் ரூ.40.
ஆண்டு சந்தா 150.

Google Pay Number 9444113205 ல் பணம் செலுத்தலாம்.

நன்றி.