கவிதை பூக்கும் தானாக/சசிகலா விஸ்வநாதன்

கவிதை வகை : அழகிய சிங்கர் என்பா
(1)
சான்றோர் கவி மழை பொழிய;

என் போன்றோர்
சொல் கற்று;

சொல் தேர்ந்து;
சொல் கோர்த்து;

சொப்பனத்தில் பிறந்ததே கவி!

        (2)

கவனமுடன் சிந்திக்க
கவிதை பிறக்கும்;

எளிதாய்; வேண்டுவது எல்லாம் கருத்தாய்

ஒரு பார்வை;
ஒரு சொற்கோர்வை;

கவிதை ஆக்க முயலுக.

           (3)

என்பின் பிறந்தோன்
சொல்வான்!” அக்கா

நீ நிறைய படி; படிக்க

படிக்க; சொல் வளம்
துலங்க;

கவிதை பூக்கும் தானாக.

1-9- 2023