பத்மினி/அழகியசிங்கர்

நிலக்கோட்டை என்கிற ஊரில் அருகில் உள்ள. கருங்கோட்டையில் பத்மினியை சிறை பிடித்து வைத்தான் சந்திரகுப்தன் என்ற அரசன்.

அவனுடைய 63வது ஆசை நாயகிகளில் ஒருவள் பத்மினி.

சமீபத்தில் அவளுடைய நடத்தை சரியில்லை என்ற சந்திரகுப்தன் கண்டுபிடித்து விட்டான்.

இதனால் அவளைச் சிறை பிடித்து கருங் கோட்டையில் காற்றுப் புகாத இடத்தில். அடைத்து வைத்தான்.

தனக்கு இது மாதிரியான தண்டனை சரியில்லை என்று வாதாடி பார்த்தாள் பத்மினி.

அவள் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை அவன்.
‘ஒழுக்கம் என்பது
பெண்ணிற்கு முக்கியம் என்பது அவனுடைய வாதம்.

“எனக்கு விருப்பமே இல்லாமல் உங்களுடைய 63 வது ஆசைநாயகியாக உங்களுடன் இருக்கிறேன். நானும் ஒரு மனுஷிதானே. எனக்கும் ஆசா பாசம் இருக்குமல்லவா” என்றாள்.

ஒரு ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியா என்று துணிச்சலா கேட்கும் போதுதான் அஸ்ரீவனுக்கு கோபம் வந்தது.
63வது ஆசை நாயகியை அடைத்து கருங்கோட்டையில் அடைத்து வைத்தான். அந்த இடத்தில் ஒருவர் அடைப்பட்டு இருந்தால், சாக வேண்டியதுதான். உணவு, தண்ணீர் என்று எதுவும் கிடைக்காது
கூப்பிட்ட குரலுக்கு யாரும் வர மாட்டார்கள். உணவு உட்கொளஅவள் அங்கே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன் உயிரை விட வேண்டும். தண்டனையை கொடுத்துவிட்டு. அங்கே விட்டு விட்டு போய் விட்டான் அரசன். அவளுக்கு மலைப்பாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்ச நேரம் அழுதாள். சூரிய வெளிச்சமே இல்லாமல் அந்த இடம் இருட்டாக இருந்தது.

ஆனால் நம்பிக்கைத் தருவதுபோல் ஒரு சின்ன துவாரத்தின் வழியாக வெளிச்சம் வந்து கொண்டிருந்தது.

அது ஒரு சின்ன ஓட்டை. அதன் வழியாக ஒரு தும்பி பறந்து கொண்டு வந்தது.

தும்பி பறந்து வந்தது. தன்னை அவளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டது. அழுகையுடன் பத்மினி பேச்சுக் கொடுத்தாள். உயிருடன் இருக்க வழி இருக்கிறதா என்று கேட்டாள். வெளியே தப்பிப் போகமுடியுமா
என்று கேட்டாள். இல்லை என்று பதில் வந்தது தும்பியிடமிருந்து.

“ஆனால் நீ உயிரோடு இருப்பதற்கு நான் வழி சொல்கிறேன்,” என்றது. அவளுக்கு வேண்டிய உணவை தும்பி அந்தச் சிறிய ஓட்டை வழியாகக் கொண்டு வந்தது. அவளுக்கு வேண்டிய எல்லா வசதிகளும் பல தும்பிகளும் சேர்ந்து கொடுத்தன.

எப்படியும் உயிருடன் இருக்க வேண்டுமென்று தீர்மானத்தில் இருந்தாள்.
தும்பிகள் கொடுக்கும். உணவுகளை உண்டு. வாழ்ந்து கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட அவள் பெரும்பொழுது தூங்கிக் கொண்டே இருந்தாள். சிறுபொழுது மட்டும் அவள் கண் விழித்து பார்ப்பாள். அப்போது அவளுடன் வந்து உறவாடிக் கொண்டிருக்கும் எல்லாத் தும்பிகளும். எல்லாம் அவளுடன் நெருக்கமாகப் பழகின. அவளுக்குப் பொழுது போவதே தெரியாமல் போய்விட்டது விதவிதமாக தும்பிகள். தங்களின் நட்பை. வெளிப்படுத்தின. ஒரு தும்பி பாட்டுப் பாடும் அவள் விருப்பத்திற்கு ஏற்ப இன்னொரு தும்பி. நடனமாடும். அவளுக்கு விதவிதமாக கதைகள் கூறும் ஒன்று. ஆரம்பத்தில் அவளைச் சந்தித்த தும்பி கேட்டது. “நீ செய்த தவறென்ன?” “அரசனைப் பொருத்தவரை நான் செய்தது தவறுதான். என்னைப் பொருத்தவரை அது தவறல்ல. என் அனுமதி இல்லாமல் என்னை 63வது ஆசைநாயகியாக வைத்துக்கொண்டான்.
எப்போதாவது என்னுடன் உறவு கொள்வான்.” நான் ஒரு சேவகனை என்னுடைய ஆசை நாயகனாக வைத்துக் கொண்டேன். இதில் என்ன தப்பு இருக்கிறது. அவன் கண்ணில் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஆசை நாயகியாக மாற்றி விடுவான். ஜாக்கிரதையாக இருந்தும் அவன் கண்ணில் பட்டதால் 63 வது ஆசை நாயகியாக மாற்றி விட்டான். அவனுக்கு அடிமையாக இருப்பது தான் என்னுடைய வேலை. பெண் என்பதால் எனக்கும் ஆசைகள் தாபம் எல்லாம் இருக்கும் அல்லவா. புரிந்து கொள்ளவில்லை அவன்.
நானும் விருப்பப்பட்டு எனக்கு உகந்த ஒருவனுடன் காதல் வயப்பட்டு இருந்தேன். அதைக் கண்டுபிடித்து விட்டான். அதற்குத்தான் இந்தத் தண்டனை என்று அழுது கொண்டே கூறினாள் பத்மினி. தும்பிகள் அவள் சோக கதையைக் கேட்டன. அவள் மீது இரக்கம் கொண்டன. தங்களால் முடிந்த உதவிகளை செய்வது என்று தீர்மானம் செய்தன.

தாண்டுகள் கழித்து பத்மினி எப்படி இருக்கிறாள் என்பதை அறிவதற்கு சந்திரகாந்தன் கோட்டைக்குத் திரும்பவும் வந்தான்.

அவள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணத்துடன் வந்தவனுக்கு. அவள் உயிரோடு இருப்பது அதிர்ச்சியாக இருந்தது.

அவள் பேய் உருவில் இருக்கிறாளா என்று பயந்தான். பத்மினி அவனைப் பார்த்து சிரித்தபடியே நெருங்கினாள்
அவன் பயந்து விட்டான். அவள் ஒரு பேயோ பிசாசோ என்று நினைத்தான். முதல் ஆண்டில் அவள் எப்படி பார்த்தானோ அப்படியே அழகு குலையாமல் இருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவனிடம் அவள் ஒரு வேண்டுகோள் விடுத்தாள்.

“என்னை இங்கிருந்து தப்பிக்க விடு.”

“நீ பேய் இல்லையே?”

“தப்பிக்க விடாவிட்டால் நான் பேயாக மாறி விடுவேன்” என்றாள்.
அவளைக் கொன்று விடலாமென்று வாளை உருவினான்.

எங்கிருந்தோ பறந்து வந்த தும்பிகள் அவனைக் கொட்டின.

One Comment on “பத்மினி/அழகியசிங்கர்”

Comments are closed.