
ராமனை விட
எனக்குக் கிருஷ்ணனைப்
பிடிக்கும்
சின்ன வயதிலிருந்தே
அவன் லீலைகள்
பலவிதம்
அவனைச் சுற்றி
பல கோபியர்கள்
அவர்களிடம்தான்
அவன் விளையாட்டு அதிகம்
கிருஷ்ணாவைப் பற்றி
ரஜனீஷ் எழுதிய
ஆயிரம் பக்கப் புத்தகம் வைத்திருக்கிறேன்
1000 பக்கத்துக்கு என்ன
எழுதியிருப்பார்?
யோசனையில்
புத்தகத்தைப் படிக்கவில்லை
அவனுடைய பகவத் கீதை ஒன்று போதும்
நம் மனம் ஒன்ற..
எப்போதும்
கிருஷ்ணனைப் பிடிக்கும்
.
