கண்ணன் வருகிறான்/புவனா சந்திரசேகரன்

கண்ணன் வருகிறான் மாயக்
   கண்ணன் வருகிறான் இன்று
        கண்ணன் வருகிறான்!

சின்னச் சின்ன அடிகள் வைத்துக்
      கண்ணன் வருகிறான் இன்று
          கண்ணன் வருகிறான்!

சிங்காரச் சிரிப்புடனே இங்கு
        கண்ணன் வருகிறான் இன்று
           கண்ணன் வருகிறான்!

குறும்பு தவழும் கண்கள் கொண்ட
          கண்ணன் வருகிறான் இன்று
             கண்ணன் வருகிறான்!

புல்லாங்குழலைக் கரத்தில் ஏந்திக்
         கண்ணன் வருகிறான் இன்று
              கண்ணன் வருகிறான்!

தவழ்ந்து அவன் வருகின்றான்!
         தரணியிலே கொண்டாட்டம்!
             காற்றில் கூட உற்சாகம்!

குறைகளெல்லாம் தீர்த்திடுவான்!
          குவலயமே சிலிர்த்து நிற்கும்
              குழந்தையவன் சிரிப்பினிலே!

கோவர்த்தனக் குடையும் ஏந்திக்
          கோகுலத்தைக் காத்தானே!
              அசுரர்களை அழித்தானே!

கோபிகளின் மனம் கவர்ந்தான்!
          யசோதையின் கரம் தனிலே
               அன்பாலே கட்டுண்டான்!

வெண்ணெய் திருடித் தின்றானே!
          காளிங்கன் சிரம் தனிலே
              நடனமாடி மகிழ்ந்தானே!

மலர் தூவிக் கவி பாடி மாயவனின்
          புகழ் நாடிப் புகலடைவோம்!
              கண்ணன் வருகிறான்!

கண்ணன் வருகிறான்! இன்று
கண்ணன் வருகிறான் மாயக்
கண்ணன் வருகிறான்!

அனைவருக்கும் எனது  இனிய ஜன்மாஷ்டமி வாழ்த்துக்கள்.

.