மகாபாரதம்! உம் கதை தான் கண்ணா!
கண்ணா! உமது தத்துவம் உண்மை…….
முழுமையாக படிக்க முடியுமா தெரியாது
உனது கதை பெரியோர் சொல்லி கேட்டவன்…….
நீ பிறந்த இந்நாளில் மகிழ்ச்சி-உனது
தாய் தேவகிக்கும் தந்தை வசுதேவருக்கும் திருமணம்…..
ஏதோ அசரீரி!பயம் கலந்த சத்தம்….
உம் தாய் மாமன் கம்சனை நோக்கி
டேய்! கம்சா உன் தங்கைக்கு திருமணம்
அவளுக்கு பிறக்கும் எட்டாம் வாரிசு-நீ
அவனைக் கொல்வாய் ! எனக் கேட்டதாம்….
திருமணத்தை தடுத்து நிறுத்தினான் உன் மாமன்
உன் தந்தையோ கம்சன் காலில் விழுந்து….
மைத்துனா!வேண்டாம் இந்த நிலை
பிறக்கும் குழந்தைகளை எல்லாம் தருகிறேன் என்றாராம்…..
கம்சன் சாந்தி அடைய,அங்கே நாரதர்
போல் ஒருவர்
எங்கும் நிறைந்தவர் தானே அவர் உம்மை விட…
எட்டாவது என்று உனக்கு எப்படி தெரியும் கம்சா!
ஆகா! புத்தி சாலி நீ என அவரை பாராட்டினாராம் உன் மாமன்……
என்ன யோசனை என்று கேட்க
மன்னா! திருமணம் நடக்கட்டும்……
உம் சிறைச்சாலையில் குடும்பம்
நடத்த விடு பிறப்பதை யெல்லாம் கொல்… இதுதான்!
பிறக்கும் குழந்தை எல்லாம் கொல்ல
நீர் தான் மாயவன்! அல்லவா….
தப்பி பிழைத்து கொடுமைக் காரன் உன் மாமனை கொன்றாய்……
நிறைய உண்டு எழுத முடியாது !
எழுதினாலும் படிப்பது யார் என்று
தெரியாது…..
மனித குலத்தில் ஏற்றத் தாழ்வு இல்லை
எல்லா உயிரும் எனது படைப்பே…..
இந்த பிரபஞ்சம் முழுவதும் நானே என்றாய்….
இது ஒன்று போதும் கண்ணா உன்னை
தெய்வமாக கொண்டாட……
வேறென்ன வேண்டும் உலகில்
வா! கண்ணா! வா! வீட்டுக்கு…..
உமக்கு வேண்டிய தெல்லாம்
உண்டு மகிழலாம் வா!கண்ணா! வா…..
அன்புடன்,
,
9994900507.

