கிருஷ்ண லீலை-2/சஞ்சயன்

சரக்கொன்றை
மரநிழலில் இன்று
என்ன சாகசம்
புரியவந்தாய்
கண்ணா?
சின்னக் குழலூதித்
துயர் வாங்கித்
துயில் தந்தாய்..
உன்னோடு விளையாட
ஆளில்லையென்றோ
காண்டா மணிஒலித்துத்
துயிலெழுப்பத்
துணிந்தாய் நீ?


கிருஷ்ண லீலை 3

சீடை கை முறுக்கு வெண்ணெய் தந்திடக் குழந்தையாவான்
சிற்றாடை குளக்கரையில் களவாடும் காதலன் அவனே
சீடனாம் பார்த்தன் வேண்டத் தேரோட்டும் சாரதி ஆவான்
சீவனின் மனக்குழப்பம் தெளிவிக்கக் கீதை சொல்வான்