இடியென விழுந்த அடி/சிவ.தீனநாதன்

(ஸ்ரீ ரமண விருந்து பாகம் – 3)

1920 இல் இருக்கும். பாலி தீர்த்தத்தின் அருகிலிருந்த ஒரு பெரிய மாமரத்தின் அடியில் நடந்த ஒரு நிகழ்ச்சி.
பிற்காலத்தில் சர்வாதிகாரியாக விளங்கிய பகவானின் சகோதரரான சின்ன சுவாமிகள் ஆசிரம நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவம்.
பகவானது அடியார்களில் தண்டபாணி சுவாமி என்பவர் பெருத்த உடலும், நல்ல வலிமையும் உள்ளவர். இவருக்கும், சின்ன சுவாமிகளுக்கும் இடையே பகைமை இருந்தது.

ஒரு நாள் தண்டபாணி சுவாமி சின்ன சுவாமிகளுக்குச் சரியான பாடம் கற்பிக்க முடிவு செய்தார்.

அதற்காக அவர் என்ன செய்தார் ? அந்த மாமரத்து அருகே சின்னசுவாமி வந்து கொண்டிருந்தபோது தண்டபாணி சுவாமி அவரை ஒரேடியாகத் தூக்கித் தரையில் துவைத்து விட நினைத்தார்.

தண்டபாணி சுவாமி சின்ன சுவாமியைத் தூக்கி அக்கணமே எதிர்பாராதவிதமாக அங்கு வந்த பகவான் தண்டபாணி சுவாமியின் முதுகில் லேசாகத் தட்டினார் அக்கணமே தண்டபாணி சுவாமி சின்ன சுவாமியை விட்டுவிட்டு நடையைக் கட்டினார் சின்ன சுவாமியின் தன் வழியே சென்றார். அங்கு ஒருவருக்கொருவர் எதும் பேசிக்கொள்ளவில்லை.

அதன்பிறகு மறுநாள் தண்டபாணி சுவாமி கூறினார். ‘பகவான் மெதுவாகத் தன் முதுகில் தட்டியது மிகவும் அதிர்ச்சி தரும் பயங்கரமான இடி போன்ற அடியாக இருந்தது’.