மேற்கத்தியோரே/ஷண்முக சுப்பையா

ஒரு பக்கம்
வாழ வழி வகுக்கும்
மறுபக்கம்
சாகக் குழபறிக்கும்
உங்களைப் போலல்ல
நாங்கள்.
நாங்களோ
வாழவும் விரும்பமாட்டோம் சாகவும் துணிய மாட்டோம் உங்களைப் போலல்ல
நாங்கள்.
வாழாமல் வாழ்ந்து
சாகாமல். சாகும்
நாங்கள் நாங்களே.