பேனா/புஷ்பா விஸ்வநாதன்

பிறந்தநாளுக்குப்
பரிசளித்த பேனாவால்
காதல் ரசம் சொட்டச்சொட்ட
எழுதிக் கொடுத்தாய்
கடிதங்களை.
இன்றோ,
அதே பேனாவால்
பிரிவுக்கடிதம்
எழுதித் தருகிறாய்.

உனக்குத் தெரியுமா?
மரணதண்டனை
எழுதிய பேனாவின்
முனையை உடைப்பார்
நீதிபதி
நீயும்
உன் பேனா முனையை
உடைத்து விடு.

One Comment on “பேனா/புஷ்பா விஸ்வநாதன்”

Comments are closed.