பேனா/சசிகலா விஸ்வநாதன்

ரூபி டீச்சரிடம்
ஆறு பேனா!

வசதியாய் எடுக்க,
வரிசையாய் வைத்திருப்பார்!

நீலம்…
ரஃப் நோட்டில் எழுத;

பச்சை..
மார்ஜினில் “சைன்” போட;

மஜந்தா பிங்க்…
“மிக நன்று” எழுத;

இந்தியன் இங்க் கருப்பு…

என் “ட்ராங்கியில் சற்றே சரி செய்ய;

சிவப்பு…
கணக்கிலும் “, “ஸ்பெல்லிங்” தேர்விலும்,

நாங்கள் வாங்கும் “முட்டை களை”
ஓடாமல் இருபக்கமும்
அண்டை கொடுப்பதற்கு;

இன்னும் ஒரு
அதி முக்கிய
வேலையும் உண்டு..
அவைகளுக்கு;

தவறுகளை
செல்லமாக சுட்ட,

எங்கள் முகத்தில்
கீறிவிடும் மீசை!

ஆகா! இன்பம்
என்றால் அதுவல்லவோ!

இரண்டு நாள் வரை
பாதுகாப்பாய் வைத்திருப்போம்..
பரம்பரை சொத்து போல்!

10-9-2023

One Comment on “பேனா/சசிகலா விஸ்வநாதன்”

Comments are closed.