.

மணல் பரப்பி
கை பிடித்து
விரலால் எழுத
ஆரம்பம்..
பின், கரும்சிலேட்டில்
வெள்ளை சாக்பீசால்
எழுதப் பழகியதுண்டு.
வயதும் வசதியும்
வளர்ந்தபின்,
காகித நோட்டும்
பென்சிலுமாய் உயர்வு.
பள்ளியிறுதி வருடங்களில்
மையூற்றி எழுதும்
பவுண்டன் பேனா
கையில் கிடைத்த
பொற்காலம்.
பால்பாயிண்ட்
பேனாவாக மாறிய
கல்லூரி நாட்கள்.
கணினி யுகத்தில்
கட்டாயமாய்
நுழைக்கப்பட்டபின்,
ஒற்றை விரல்
தட்டச்சில் உள்ளீடு.
இப்போ,
அறிதிறன் பேசியில்
தொடுதிரையில்
கை பிடித்து
விரலால் எழுத
ஆரம்பம்……
. 10.09.23 (உலக பேனா தினம்.)
