
ஏய்
பட்டாம்பூச்சி !
எங்கே போகிறாய் என்றேன் ;
அது
திரும்பிப் பார்க்கவே இல்லை.
ஓடி ஓடி மூச்சிரைத்து
முன்னே சென்று நின்றேன் .
“பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி என்று
பலமுறை கூப்பிட்டேனே
ஏன் நிற்க மறுத்தாய் ?’
” அது என் பெயர் இல்லையே “
” ஏன் அது உன் பேர் இல்லை?
” ஏனென்றால் அது நீ எனக்கு வைத்த பெயர் !”
” அப்படி என்றால் உனக்கு நீ வைத்துக் கொண்ட பெயர் ?”
“அழகி ” எனச் சொல்லிவிட்டுப் பறந்து சென்றது.
தோட்டத்திலிருந்து
வவேசு
09/09/2023
