சனாதனம்/எஸ்ஸார்சி

14/9/23 கவிதை அரங்கு
எஸ்ஸார்சி வாசித்த கவிதை

சனாதனம் பற்றிய சர்ச்சை
பாரெங்கும் தொடர்கிறது
தெரிந்ததைத் தெரியாதது போல்
இருதரப்பாரும் அடம் பிடிக்கிறார்கள்
அரசியல் பண்ணுகிறார்கள்
வாய்மையே வெல்லும்
வந்தே மாதரம்
வசுதெய்வ குடும்பகம்
அதிதி தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ
தருமத்தை நீ காப்பாற்று
உன்னை அது காப்பாற்றும்
இவ்வகையில் இன்னும் ஆயிரம் உண்டு
குகனைச்சோதரனாய்
ஜடாயுவைத் தந்தையாய்ப்
போற்றியக்கரிய பெரியவனும்
பாஞ்சாலியைக்காத்த கண்ணபிரானும்
நீ கடமையைச்செய் பணித்த கீதாச்சாரியனும்
கலிங்கத்துப்போரில் வெற்றி பெற்றுக் கண்ணீர் சிந்திய அசோகப்பேரரசனும்
இம்மண்ணின் மாண்புகள்
சாதியக்கொடுமையும்
பெண்ணடிமைப்பேதமையும்
காறித்துப்பவேண்டிய
கண்ணராவிக் களங்கங்கங்கள் காக்கைக்குருவி எங்கள் சாதி பாடிய பாரதிதான்
வேதம்புதிது செய் என்றான்
நமக்கு உரைக்கத்தான் இல்லை இன்னும்
குழந்தையைக்
குளிப்பாட்டுங்கள்
அசுத்த நீரைத்தூரமாக்குங்கள்
குழந்தையை அல்ல.