மூன்று கவிதைகள்/சுரேஷ் ராஜகோபால்

(14 09 2023
இன்று கவிதை வாசிக்கலாம் நிகழ்ச்சியில் படித்த கவிதை)

என்ன?

நாட்காட்டியில் தேதிகள்
கிழி பாடாமல் இருப்பதால்
நாள்தான் செல்லாதா என்ன?

கடிகாரம் ஓடாமல்
நின்று விட்டதால்
நேரம்தான் ஓடாத என்ன?

ஏன்?

பெருமழையை ஏற்காத மனம்
உச்சி வெயிலைச் சகிக்காத மனம்
நமது இச்சைக்கு மட்டுமே
இயற்கை உடன்பட
வேண்டுமென எதிர்பார்ப்பு ஏன்?

நின்று விட்டேன்

வெளிச்சத்தைத் தேடி
இருளில் பலநாள் ஓடினேன்
இருளே தொடர்ந்தது,
சோர்வாகத் தளர்ந்தேன்
மேலே செல்லத் தயங்கினேன்
வெளிச்சம் வரவேயில்லை
இருளே வாழ்வென்று
அங்கேயே நின்று விட்டேன்.