
(13வது கவிதை வாசிக்க வாங்க கூட்டத்தில் வாசித்த கவிதை)
செவ் ஒளிர் நெற்றிக் குங்குமத்
துகளின் அக்நி குஞ்சொன்று தா
நெறித்து நிற்கும் புருவங்களின் வில் அம்பும் வேண்டும்
விடைத்து நிற்கும் நாசியில் எங்கள் கோழைத்தனத்தை எடுத்துக்கொள்
உன் வீர மூச்சை வெளியில் தா
அறமும் சீற்றமும் கொண்ட உன் கண்களின் மொழி வேண்டும்
உலகை செவிகளாலும் அறிந்த உன் காது மடல்கள் காப்பாக வேண்டும்.
செந்தமிழ் பாடிய செந்நா எம்முடன் என்றும் இருக்க வேண்டும்
ஆயினும் பாரதி
நீ இங்கே வர வேண்டாம்
எதிரிகள் யார் என இனம் கண்டு கொள்ள முடியும் அன்று
இன்று எம் கைகளைக் கொண்டு எம் கண்களைக் குத்துகிறார்கள்
நீ நேர்கொண்ட பார்வையுடன் அங்கேயே இரு பாரதி
உன்னைப் போல் ஒரு யுக புருஷன் பாரதத்தில் வந்தும் என்ன பயன்?

சரியான கருத்து. எம் கைகளைக் கொண்டே எம் கண்களைக் குத்துகிறார்கள்