டிரெயின் பற்றி கவிதைகள்/அழகியசிங்கர்

  1. நண்பர்களே
    புரிந்து கொள்ளுங்கள்
    இன்று
    டிரெயினில்
    பயணம் செய்கிறேன்
  2. ஒரு இடம்
    எனக்கு டிரெயினில்
    பிடிக்கவில்லை

3.ஜோல்னாப்
பை முழுவதும்
புத்தகங்கள்
எடுத்துக் கொண்டு
வந்திருக்கிறேன்

4.மயிலாடுதுறை
மதியம்
வந்துவிடும்

  1. என் எதிர்
    ஸீட்டில்
    ஒரு பெண்
    உட்கார்ந்திருக்கிறார்
  2. எதிர் ஸீட்டில்
    வீற்றிருக்கும்
    பெண்ணிற்கு
    என்னைத் தெரியாது
  3. இருவர் மூன்று
    பெரிய பெட்டிகளை
    எடுத்து வந்தார்கள்.
    எப்படியோ
    கீழே வைத்து
    விட்டார்கள்
  4. துபாயா
    என்று கேட்டேன்
    ‘ஆமாம்’ என்றார்கள்
  5. எதிர் ஸீட்
    பெண் என்னைப்
    பார்க்கவில்லை.
    கண்ணை மூடி
    தூங்கிக் கொண்டிருக்கிறாள்
  6. ஆனால்
    துபாயிலிருந்து
    வந்தவர்களிடம்
    பேசிக் கொண்டிருந்தேன்

One Comment on “டிரெயின் பற்றி கவிதைகள்/அழகியசிங்கர்”

  1. ரயில் பயணம் இப்படித்தான். பல புதிய அனுபவங்களையும் நண்பர்களையும் தரும் அப்பெண் போலச் சிலப் பேசா மடந்தைகளும் கிடைக்கக்கூடும். நான் மும்பை செல்கையில் ரயில் பயணம் இரண்டரை நாள். நல்ல அனுபவம்

Comments are closed.