ரொட்டியும் இசையும்


கான்ராட் அய்க்கின்

மொழி பெயர்ப்பு : க. மோகனரங்கன்

நான் உன்னுடன் கேட்ட இசை,

இசையை விடவும்

அதிகமானது.


நான் உன்னுடன் பகிர்ந்த

ரொட்டி, ரொட்டியைக்

காட்டிலும் கூடுதலானது.


நான் இப்போது உன்னோடு

இல்லை, எல்லாமே

பாழாகிவிட்டது.


ஒருபோது மிகவும் அழகாக

இருந்த அனைத்துமே

மரித்துவிட்டன.

One Comment on “ரொட்டியும் இசையும்”

Comments are closed.