பிரளயம்

ப.மதியழகன்

சட்சட் சடசட
தூறல் ஆரம்பித்தது
எண்ணம் போலும் மேகம்
என்மனவானில்
வந்து வந்து போகும்
ஒரு மின்னல் வெட்டு
என்ன அற்புதம்
ஒலியும் ஒளியும்
ஆகாசத்திலிருந்து தான்
பிறந்திருக்கும்
அர்ச்சுனனைக் கூவி அழைக்கலாம்
இடி நிற்காது
பாடைகட்டி காவடி
எடுக்கலாம்
பாபம் தொலையாது
ஆகாசத்துக்கு முன்னால்
பூமிப்பந்து சிறுதூசு
பூமியில் இருந்துகொண்டு
எத்தனை முறை சூரியனை
வலம் வந்திருப்பேன்
சட்சட் சிறுதூறல் பேய்க்காற்று
கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி
அம்பு பாய்வது போல மின்னல்
கர்த்தா நானல்ல நீயே
அலைகள் எழுகிறது
ஓய்கிறது அவ்வளவே!

One Comment on “பிரளயம்”

Comments are closed.