ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதை

விருந்துக்கு வந்தவனை
கூலிக்குப் பேசி
வேலைக்கு அமர்த்தும்
இந்த வாழ்க்கையோடு
இன்னும் விவாதித்து
விசனப்பட்டுக் கொண்டிராமல்
ஒரு பூஞ்செடியை நட்டு
அதன் வேர்களில் என்னுயிரூற்றை பின்னி விட்டுப் போகவே விரும்புகிறேன்
என்னை விட்டு!

(சம்மனசுக்காடு Sandhya Pathippagam )