மழை கவிதைக்கு

வேணுகோபாலன்

மழை கவிதைக்கு நிறைய வரவேற்பும் வாழ்த்தும் வந்த வண்ணம் உள்ளது.

அதற்கு ஒரு முன் கதைச் சுருக்கம் உள்ளது.

அது இங்கே, உங்கள் எல்லோர் வாசிப்புக்கும்..

இன்று காலை ஆறு மணிக்கு எழுந்து பார்த்த போது,
கோடம்பாக்கம் பராங்குசபுரம், 2015ம் ஆண்டை மீண்டும் அச்சத்தோடு நினைக்க வைக்கிறது.

எங்கள் வீட்டுக்குள் எந்த நேரமும் நீர்ப் பெருக்கு நுழைய முயற்சி செய்து கொண்டிருக்கிறது. காலை 6 மணிக்கே தெருவில் இருந்து வீடு நோக்கிய நடை பாதை நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்தது.

முடிந்த வரை கீழ் அடுக்குகள் காலி செய்து வைத்து விட்டுப் பார்க்கும் போது, வெள்ளம் கிரில் கேட்டு கடந்து வணக்கம் என்றது.

ஒரு வழியாகக் காலை உணவு (இட்லி) முடித்துக் கொண்டு, வீடு பூட்டிக் கொண்டு தலைக்கு மேல் இரு சிறு பைகள் சுமந்து இடுப்பளவு தண்ணீரில் தெருவில் நடந்து ஒரு வழியாக ஆறு தெரு தள்ளி இருக்கும் எங்கள் மகள் இல்லத்திற்கு பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம்.

இது, காலை 11 30 மணிக்கு நண்பர்கள் சிலருக்கு அனுப்பிய பதிவு.

இன்னமும் நிலை மாறவில்லை என்று தகவல், மகள் வீட்டில் இருக்கிறோம். அவள், இருதய சிகிச்சை செய்து வீடு திரும்பியுள்ள தனது மாமனார் வீட்டில் உதவிக்கு (அதுவும் அருகே உள்ள உள்ள வீடு தான்), கணவருடன் சென்றிருக்கிறாள்.

நாங்கள் பத்திரமாக இருக்கிறோம், வீட்டைத் தனியே விட்டு வந்து விட்டோம். அதற்குத் துணையாக வெள்ளத்தையும்….

One Comment on “மழை கவிதைக்கு”

Comments are closed.