22.09.2023 – வியாழன்
ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: ஊருக்குப் போய் வந்தீர்களா?
அழகியசிங்கர் : போய் வந்தேன். நல்ல அனுபவம். அசிக்காடு என்ற எங்கள் கிராமத்தில் உள்ள கோவில்களுக்குக் கும்பாபிஷேகம். 3 நாட்கள் முழுவதும் கிராமத்தில் பெரும்பாலான பொழுதை குடும்பத்தோடு கழித்தேன். நன்றாகப் பொழுது போயிற்று.
ஜெகன் : மெய்மறந்து போய்விட்டீர்கள் போலிருக்கு..
மோகினி : நீங்கள் படிக்க ஒரு பை நிறையப் புத்தகங்கள் எடுத்துப் போனீர்களே? படித்தீர்களா?
அழகியசிங்கர் : இல்லை. என் கவனம் முழுவதும் கும்பாபிஷேகத்தில் நுழைந்து விட்டது.
மோகினி : அப்படித்தான் ஆகிவிடும.
அழகியசிங்கர் : என்னமோ புத்தகங்களைப் படிக்க வேண்டுமென்று தோன்றவில்லை. நேரம் தேவையான அளவிற்கு இருந்தது.
ஜெகன் : சில சமயம் அப்படி ஆகிவிடும்.
அழகியசிங்கர்: பேப்பர் கூட வாங்கிப் படிக்கவில்லை. மாயவரத்திஙூருந்து காரில் அசிக்காடு கிராமத்திற்குச் சென்றோம. அங்கயே இருந்து திரும்பவும் மாயவரத்திற்கு வந்தோம். 3 நாளும் அப்படியே கழிந்தது.
ஜெகன் எதாவது எழுதினீர்களா?
அழகியசிங்கர் : டே எக்ஸ்பிரஸில்தான் போனோம். ரயில் பயணத்தை வைத்துக்கொண்டு ஒரு நீண்ட கவிதை எழுதினேன். அவ்வளவுதான்.
மோகினி : வேறு எதாவது கோயில் போனீர்களா?
அழகியசிங்கர் : கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. திங்கள் வினாயகர் சதூர்த்தி. அன்று நாங்கள் இருந்த இடத்தில் கொண்டாடிவிட்டு கணபதி அக்ரஹாரம் என்ற ஊருக்குப் போனோம்
ஜெகன் : நல்ல அனுபவமாக இருந்திருக்கும்.
மோகினி : நீங்கள் இவ்வளவு தூரம் கடவுள் நம்பிக்கை உள்ளவரா என்று எனக்குத் தெரியவில்லை.
அழகியசிங்கர் : கடவுள் நம்பிக்கை என்பதைவிட ஒரு புது அனுபவம் கிடைத்தது.
ஜெகன் : உண்மைதான். தமிழ் நாட்டில் உள்ள பல இடங்களில் புத்தகக் காட்சிகள் கலந்து கொண்டீர்களே? உங்கள் அனுபவம் என்ன?
அழகியசிங்கர் : எதிர்பார்த்தபடி புத்தகங்கள் விற்கவில்லை. செலவுதான் கூடிப் போனது.
மோகினி : அச்சுப் புத்தகத்திற்கு மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு போகுமா?
அழகியசிங்கர் : அப்படிச் சொல்ல மாட்டேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகும் என்று நினைக்கிறேன்.
மோகினி : இன்றைய இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.
அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.
ஜெகன்: இன்று பேசியது போதும்.
அழகியசிங்கர். எல்லோருக்கும் இரவு வணக்கம்.
Night 10.11 pm

நல்ல உரையாடல்