மனதுக்குப் பிடித்தக் கவிதைகள் 163/அழகியசிங்கர்

இன்று மரத்தோடு

ஈரோடு தமிழன்பன்

மனிதரோடு
வாழ்ந்து வந்த நான்
இப்போது இந்த
மரத்தோடு
வாழ்கிறேன்.

ஓ !
இந்தப்
பச்சை வீட்டுக்குள்
என்ன பரவசம்!
கிளைகளுக்குள் விசாலித்தன
என் கை, கால்கள்.

பூமியின்
ஈரம் இதயத்தின்
வேர்களோடு உறவாடினேன்.
விரும்பும் வேளையில்
அருகருகாக உரையாடினோம்–
நானும் நட்சத்திரங்களும்.

பால் நனைத்த
பகல்களில்
அரும்புகளோடும் மலர்களோடும்
கண்ணாமூச்சி ஆட்டம்.

நன்றி : அப்பாலுக்கு அப்பால் – மகாகவி ஈரோடு தமிழன்பன் – கல்தச்சன் பதிப்பகம், 21 மேயர் சிட்டிபாபு தெரு, திருவேட்டீஸ்வரன் பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை 600 005 – பக்கங்கள் : 80 – விலை ரூ.100.