
உள்ளத்து ஆழத்தில்
ஓடிய ரகசியப்
பாரத்தைத் தூக்கிப்
போட்டது யாரிடம்
சின்ன நோய்களில்
சிரமப் பட்டதும்
கண்களில் ஈரம்
கசிந்தது யாரிடம்
பதவியில் உயர்வைப்
பார்த்த போதெலாம்
தோள்களைத் தட்டிய
கைகள் யாரிடம்
முன்னேற்றப் பாதையின்
ஒவ்வொரு முக்கிலும்
முட்களை நீக்கிய
விரல்கள் யாரிடம்
துன்பமும் தொல்லையும்
துரத்திய போதிலே
தோள் தேடி ஓடித்
துவண்டது யாரிடம்
————————-

Arumai
துவளும் போது தட்டிக் கொடுப்பது யார். அருமை
உன்னால் முடியும் தம்பி என்று ஊக்குவிப்பது யார்?
A friend in need is a friend indeed.