பிழைப்புக்கென நிரந்தரமாய்/வைத்தியநாதன்

பிழைப்புக்கென நிரந்தரமாய்
இடம் விலகியதில் வம்சாவழியாய்
ஒலித்து வந்த ஒலி.
சற்று முழுவதுமாய் புதிய ஒலி
நிரப்பிக் கொள்ளாது சிந்தை வெறுமையற்று இருக்க ,
பிரவாகமாய்.
வேறு ஒலி சப்தித்தது. பழகியும் வழங்கியும்
வந்ததெல்லாம்
மண் மாற்றம்
தாங்காது
மடியப் பார்த்தன மெதுவாக
இருப்பினும்
இவைபற்றி
சிந்தித்தோ இன்றியோ முன்விலகியவர் சேர்ந்து,
ஒழுகியதையும்
மயங்கி
மடிவதையும்
காக்க முயல்கின்றார்; இறைவனைப் பொன்கொட்டி
ஓரிடத்தில் உட்கார்த்தி

(ழ கவிதைகள்).