
அவமானப்பட தயாராக இருப்பவர்களைத்தான்
அவமானப்படுத்துகிறார்கள்
அழுவதற்கு ஆயத்தமாக இருப்பவர்ளைத்தான்
அழவைக்கிறார்கள்
உடைய ஏதுவாக இருக்கும் இதயங்கள்தான்
உடைக்கப்படுகின்றன
உதிர்வதற்கு மெலிதான சிறகுகள்தான்
உடனடியாக உதிர்க்கப்படுகின்றன
நீ என்னை நடத்தியதுபோல
இன்னொருவரை நடத்தியிருக்கவே முடியாது
ஒரு காய்ந்த இலையைவிடவும்
எளிதாக விலகிச் சென்றேன்
30.9.2023
இரவு 10.19

உண்மை. மறுக்க முடியாது.
ரொம்ப சரி