
மின்சாரம் நின்ற வீட்டில்
அம்மை யோசித்து யோசித்து
தொட்டில் குழந்தையை நீங்கி
அடுக்களை போகிறாள்
அவள் வரும் வரை
விளக்குச் சுடர்
காற்றிலசைந்து
தொட்டிலின் நிழலைத்
தாலாட்டுகிறது
(மீள்)

மின்சாரம் நின்ற வீட்டில்
அம்மை யோசித்து யோசித்து
தொட்டில் குழந்தையை நீங்கி
அடுக்களை போகிறாள்
அவள் வரும் வரை
விளக்குச் சுடர்
காற்றிலசைந்து
தொட்டிலின் நிழலைத்
தாலாட்டுகிறது
(மீள்)